'டன்கி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?
Dunki First Day Collection update
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜவான்' இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று ரூ. 1200 கோடி வசூலித்தது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனை தொடர்ந்து பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான 'டன்கி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் டாப்ஸி, விக்கி, கௌஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று முதல் நாளில் ரூ. 58 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் முதல் நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்த நிலையில் 'டன்கி' திரைப்படம் அதில் 50% கூட வசூலிக்கவில்லை. இதற்க்கு பலரும் ஆக்ஷன் அல்லாத திரைப்படங்களுக்கு இது சகஜம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Dunki First Day Collection update