முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின்; விஜய்யை தாக்கிய சத்யராஜ்..!
Stalin is a spineless field fighter Sathyaraj attacked Vijay
சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய போது, மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Stalin is a spineless field fighter Sathyaraj attacked Vijay