லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாபி அணி; ஆட்டநாயகனாக பிரப்சிம்ரன் சிங்..!
Punjabi team defeated Lucknow team
10 அணிகளுக்கிடையிலான இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி - பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி லக்னோ அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அணியின் சார்பில் அதிகபட்சமாக பூரண் 44 ரன்களும், ஆயுஷ் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 03 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 08 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக பிரப்சிம்ரன் சிங்குடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதில், பிரப்சிம்ரன் சிங் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும், நேஹல் வதீராவும் அதிரடி காட்டி 16.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களுடனும், நேஹல் வதீரா 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
English Summary
Punjabi team defeated Lucknow team