மனைவியை காதலனுக்கு கல்யாணம் செய்து கொடுத்த கணவன்; புதிய மாமியாரின் தந்திரத்தால் நடந்த திருப்பம்..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் கொலை செய்து விடுவார்கள் என்ற பயத்தில் தனது மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. ஆனால், திடீரென கணவர் தனது மனைவியை ஒரு சில நாட்களில் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 

உ.பி.,யின் சந்த் சபீர் நகரின் கடார் ஜாட் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி பப்லு. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பப்லு வெளியூரில் வேலை செய்து வந்தார்.  அப்போது அவரது மனைவிக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் இடையே கள்ள தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய பப்லு இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது 18 மாதங்களாக , ராதிகா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், பப்லு யாரும் எதிர்பார்க்காத நிலையில், தன் மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்து அதிர்ச்சியளித்தார்.

அத்துடன், குழந்தைகளை தானே வளர்ப்பதாகவும் கூறிய அவர், காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவர்களை கொலை செய்யும் சம்பவங்களால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

தொடர்ந்து ராதிகா, காதலன் விகாஸ் என்பவரது வீட்டில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், விகாஸின் அம்மா, ராதிகாவின் புதிய மாமியாருக்கு, தனது மருமகள் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து வந்தது பிடிக்கவில்லை. குழந்தைகள் தாயார் இல்லாமல் வாழ்வது கஷ்டம். அப்படி ஒரு சூழ்நிலை குழந்தைகளுக்கு வேண்டாம். நீ மீண்டும் உன் பழைய கணவன் பப்லுடன் சென்று சேர்ந்து கொள் என்று விகாஸின் தாயார் அறிவுரை கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட ராதிகா, தன் பழைய கணவனை தேடிச் சென்றதில் பப்லுவும் தனது மனைவியை ஏற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பப்லு கூறுகையில், ராதிகா வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மை தான் . அவர் அப்பாவி. அவர் மீண்டும் வந்துவிட்டார். அனைத்துக்கும் நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் குடும்பமாக வாழ்வோம் என்று கூறி எல்லோரும் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband marries wife to lover twist caused by new mother in law trick


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->