ஏவிஎம் அருங்காட்சியகத்தில் பிரபல நடிகர் ஒட்டிய பைக்!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் திருப்பதி படத்தில் ஓடிய இருசக்கர வாகனத்தை ஏவிஎம் நிறுவனம் பாரம்பரிய அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்ற பெயரில் வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்டுடியோவில் பாரம்பரிய திரைப்பட கருவிகள் மற்றும் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அருங்காட்சியத்தில் பழமையான திரைப்பட கேமராக்கள், ப்ரொஜெக்டர்கள், லைட்டு, நடிகர்கள் பயன்படுத்திய வாகனம், ஆடைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் 45 பழமையான கார்களும் 20 இருசக்கர வாகனங்களும் உள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஓட்டும் இருசக்கர வாகனங்கள் எப்போதுமே கவனம் பெறும் வகையில் தான் இருக்கும். 

அதன்படி நடிகர் அஜித் திருப்பதி படத்தில் ஒட்டிய இருசக்கர வாகனம் (பஜாஜ் பல்சர் 180cc 2004) ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actor bike in AVM museum


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->