பரந்தூரில் விமான நிலையம் : ஆய்வு எல்லைகளை வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், புதியவிமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேலும் இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு வகையிலான போராட்டங்களை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க, ஆய்வு எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paranthur airport union ministry of environment has given inspection boundaries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->