சிறுமியிடம் செல்போன் பறிப்பு! தரதரவென இழுத்துச் சென்ற வழிப்பறி கும்பல்! - Seithipunal
Seithipunal


12 வகுப்பு மாணவி செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்ற போது வழிப்பறி கொள்ளையர்களால் இரு சக்கர வாகனத்தில் சிறுமியை தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இளைய சகோதரியுடன் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 12 வகுப்பு படிக்கும் லக்ஷ்மி என்ற சிறுமி.

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த சிறுமியின் செல்போனை பறிக்க இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் தனது செல்போனை சிறுமி இறுக்கி பிடித்து கொண்டார். மேலும், அந்த வழிப்பறி கும்பலிடம் போராடியுள்ளார். இதனால் சிறுமியின் கையை பிடித்து கொண்டு தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசென்ற கும்பல் கடைசியாக அந்த சிறுமியிடம் செல்போனை பறித்துக் கொண்டனர்.

அந்த கும்பலில் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த சிறுமியை பார்த்து மன்னித்து விடு என்று கூறிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன் சென்றுள்ளான்.  

இந்நிலையில், சிறுமி (லக்ஷ்மி) சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். 

அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த கும்பலை தேடி பிடித்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cell phone stolen from the girl The bandits who dragged the standard


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->