அபிதாபி பட்டத்து இளவரசர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரில் சந்திப்பு! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான்  நேற்று இந்தியா வந்தடைந்தார். அமீரகத்தின் பல்வேறு துறை மந்திரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன்  இந்தியா வந்துள்ளது.

முதல் முறையாக பட்டத்து இளவரசராக இந்தியா வந்த அவருக்கு டெல்லியில் சிறப்பான நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.  அவரை மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் விமான நிலையத்தில் வரவேற்றார். இதன் பின்னர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அபுதாபி பட்டத்து இளவரசர் சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து கலந்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு நட்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர் என கூறப்படுகிறது.

அபுதாபி பட்டத்து இளவரசர் சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான் ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் நேரில் சந்தித்து பேச உள்ளார்.

டெல்லியில் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மும்பை செல்ல இருக்கும் பட்டத்து அபுதாபி பட்டத்து இளவரசர், அங்கு இரு நாடுகளின் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்பு நிகழ்வில் கலந்துகொள்கிறார் என தகவல் வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abhidabi Crown Prince meets Prime Minister Narendra Modi in person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->