எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு; ஆஜராக சம்மன் அனுப்பியுள்ள நீதிமன்றம்..!
Defamation case against Edappadi Palaniswami Court has summoned him to appear
அவதூறு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கே.சி.பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார். இந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி வரும் 15-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கடந்த 20180-ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார். அப்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை ஒன்றிணைக்க கே.சி.பழனிசாமி, ஜே.சி.டி. பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கடந்த ஆண்டு ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்தனர். இந்த ஒருங்கிணைப்பு குழு குறித்து இ.பி.எஸ் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் கே.சி.பழனிசாமியை அ.தி.மு..கவில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து, தன்னைப் பற்றியும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் எடப்பாடி பழனிசாமி அவதூறாக கருத்து தெரிவித்ததாக கோவை குற்றவியல் கோர்ட்டில் கே.சி.பழனிச்சாமி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை வைத்தார். இவ்வழக்கு விசாரணையின் போது கே.சி.பழனிசாமி தரப்பில் வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Defamation case against Edappadi Palaniswami Court has summoned him to appear