தெலுங்கானாவில் அதிர்ச்சி: வெளிநாட்டு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டாக்சி டிரைவர்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு, ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் தனது நண்பருடன் கடந்த மாதம் 04-ஆம் சுற்றுலா வந்துள்ளார். அங்கு சில நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்த பெண் மற்றொரு சுற்றுலா பயணியுடன், நேற்று ஐதராபாத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்க மமிடிபள்ளிக்கு  டாக்சியில் நோக்கி சென்றுள்ளனர்.

அந்த இளம்பெண்ணுடன் வந்த நண்பர் மமிடிபள்ளி செல்லும்முன் மற்றொருவரை சந்திக்க பாதி வழியில் இறங்கியுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் டாக்சியில் தனியே சென்றுள்ளார். அப்போது, மாலை 07.30 மணியளவில் மமிடிபள்ளி அருகே ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு டிரைவர் காரை ஓட்டி சென்றுள்ளார். அங்கு புகைப்படங்கள் எடுக்க அழகான இடங்கள் இருப்பதாக கூறி இளம்பெண்ணை காரை டிரைவர் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், டாக்சி ட்ரைவர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் காரை நிறுத்திய அந்த பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி கூச்சலிட்டுள்ளார். அப்போது, கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அத்துடன், அந்த டாக்சி டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Taxi driver sexually assaulted a young foreign woman in Telangana


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->