விபத்தில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி! - Seithipunal
Seithipunal


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான மணிமேகலை விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் மணிமேகலை. இவர் தொகுப்பாளினி. 

சமூக ஊடகங்களில் இவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருப்பவர். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து இளைஞர்களின் மனதைக் கவர்ந்த இவர் பட்டிமன்ற பேச்சு மற்றும் லைவ் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் தற்போது கலக்கி வருகிறார். 

இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டு போட்டு இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதில் 'நான் எதிர்பாராத விபத்தில் கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. மிகவும் மன சோர்வுடன் இருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். 

இதனை பார்த்த மணிமேகலையின் ரசிகர்கள், காலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous presenter involved accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->