மெட்டி ஒலி புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்.. சோகத்தில் சின்னத்திரைஉலகம்.!
Famous Television Actress Metty Oli Uma Maheswari Passed Away 17 Oct 2021
பிரபல சின்னத்திரை நடிகை உமா மகேஸ்வரி உயிரிழந்தார்.
மெட்டிஒலி தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஸ்வரி. இவர் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 40.
திருமுருகன் இயக்கத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற உமாமகேஸ்வரி, பல மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை வாந்தி எடுத்து மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Famous Television Actress Metty Oli Uma Maheswari Passed Away 17 Oct 2021