"விடுதலை போல் படமெடுக்க வெற்றி மாறனுக்கு கூசவில்லையா".? பிரபல எழுத்தாளர் கடும் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும்  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .

இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமானது  அப்பட்டமான ஒரு கதை திருட்டு என  பிரபல எழுத்தாளரும் வழக்கறிஞருமான  இரா முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜெயமோகன் எழுதிய நாவலின் தழுவல் என்று சொல்லப்பட்டாலும்  பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி உள்ளிட்ட பல நாவல்களிலிருந்து கதைகளை எடுத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார் என குற்றம் சாட்டி இருக்கிறார்.

வெற்றிமாறன் யாரிடமும் உரிமை கேட்காமல் அவரது இஷ்டத்திற்கு பல்வேறு நாவல்களிலிருந்து கதைகளை எடுத்து மக்களை குழப்பியிருக்கிறார். மக்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம் ஆனால் எழுத்தாளர்களுக்கு அது கண்டிப்பாக தெரியும் எனக் கூறியுள்ளார்.

விடுதலை திரைப்படத்தை ஒரு டப்பா திரைப்படம் என கடுமையாகச் சாடி இருக்கிறார் எழுத்தாளர். அடுத்தவர்களின் கதைக்கு முன்னால் தன் பெயரை போடுவதற்கு வெற்றிமாறனுக்கு கூசவில்லையா. வெட்கமில்லாமல் விடுதலை திரைப்படம் பற்றிய பேட்டிகளை கொடுத்து வருகிறார் எனவும் கடுமையுடன் கூறி இருக்கிறார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous writer and lawyer e ra muruga vel slams vetrimaaran for viduthalai movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->