பிரபல 'டிக் டாக்' புகழ் ஜி.பி. முத்து மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


‌டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் ஜி.பி .முத்து. இவர் சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய இயல்பான பேச்சு மற்றும் கிராமப்புற நகைச்சுவையின் மூலம் பல ரசிகர்களை கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது யூட்யூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பல லட்சக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஜி பி முத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இவர் தனது மகனுக்கு உடம்பு சரி இல்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஜி.பி. முத்து நடித்திருந்தார்.

 யூட்யூப் நிகழ்ச்சிகளின் மூலம் இவர் கடிதம் வாசிக்கும் நிகழ்ச்சியும், மேலும் தனது வட்டார வழக்கில் இவர் பேசும் கெட்ட வார்த்தைகளும் ரசிகர்களுக்கு  மிகவும் விருப்பமான ஒன்று. சமீபத்தில் கூட துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ரசிகர்களின் அழைப்பின் பேரில் இவர் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜி.பி. முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக அறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஜி பி முத்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. ஜி பி முத்து விரைவாக நலம் பெற வேண்டி  அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fans pray for GP Muthu ill health and a speedy recovery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->