வரிசைக்கட்டி வந்த தோல்வியினால் தான் இந்த முடிவா.? கௌதம் மேனன் படங்களில் நடிக்க காரணம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிய இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம்,  விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

சில நாட்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம்  ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் சியான் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தையும் முடித்திருக்கிறார் இவர். விரைவில் அந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சில காலமாக திரைப்படங்கள் இயக்குவதை குறைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம் மேனன். சிம்பு நடிப்பில் வெளியான பத்து  தல திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் படம் தயாரித்து அதனால் நஷ்டத்தில் இருப்பதால் அதை ஈடு செய்ய திரைப்படத்தில் நடிப்பதாக  செய்திகள் பரவினர்.

 இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அவர் . இது பற்றி கூறியிருக்கும் கௌதம் மேனன்  நான் பொருளாதார ரீதியாக  நஷ்டத்தில் இருப்பதால் படத்தில் நடிப்பதாக சிலர் பேசி வருகின்றனர் . உண்மை அது  இல்லை . எனக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததால் தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் . அதனால் என்னிடம் வந்து யாராவது நடிக்க சொன்னால் நோ சொல்ல மாட்டேன் என கூறியிருக்கிறார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For this reason I did not act in the film Gautham Menon Open Talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->