ரீ ரிலீசுக்கு தயாராகிறதா 'கில்லி'? உற்சாகத்தில் ரசிகர்கள்!
Gilli movie rerelease update
நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ''கில்லி''. தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
'ஒக்கடு' என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கான 'கில்லி' ரூ. 50 கோடி வசூலித்து நடிகர் விஜய்யின் மார்க்கெட்டை அதிகரித்தது.
இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால் வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி இந்த திரைப்படம் மறு வெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் 4கே டிஜிட்டல் தரத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Gilli movie rerelease update