பாகிஸ்தானுக்கு ஆதரவாக நான் கருது தெரிவித்தேனா? விஜய் ஆண்டனி கொடுத்த விளக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் காஷ்மீர், பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஜய் ஆண்டனி விடுத்த அறிக்கையில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். “பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து என்று பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விஜய் ஆண்டனி விளக்கமளித்துள்ளார்.

அதில், "என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palkan Attack Vijay Antony 2nd statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->