பாலியல் பதிவுகளுக்கு தடை கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
today hearing harassment posting in social media case
இன்று உச்ச நீதிமன்றத்தில் சமூக வலைத்தளங்களில் பாலியல் பதிவுகளை தடை செய்யக்கோரும் மனு விசாரணைக்கு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி மற்றும் பாலியல் சார்ந்த பதிவுகள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வெளியாகின்றன. ஓ.டி.டி. தளங்களிலும் படங்கள், தொடர்கள் செக்ஸ் தொடர்பான காட்சிகள் தணிக்கை செய்யப்படாமல் வெளியாகின்றன.
ஆகவே, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் காட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
இதற்காக தேசிய உள்ளடக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.
English Summary
today hearing harassment posting in social media case