அயராது உழைக்கும் காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
One day off a week tireless police officers CM MK Stalin
தமிழக சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.
காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
One day off a week tireless police officers CM MK Stalin