வெளியானது அஜித் படத்தின் அடுத்த அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘AK 63’ திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

good bad ugly movie update


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->