வாய் விட்ட ப்ளூ சட்டை மாறன்! வச்சு செய்த ஜிபி முத்து! தரமான, சிறப்பான சம்பவம்!
GP Muthu responded to the blue shirt maran who criticized him as a pig
ஜி.பி முத்து குறித்து மரியாதையற்ற முறையில் விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு தனது பாணியில் ஜி.பி. முத்து தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், அடி்கடி தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். சமீபத்தில் வெளியான பம்பர் திரைப்படத்தில் வெற்றி, ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில், இந்த படம் நல்லா இருக்கு, ஆனால் படத்தில் தேவையில்லாமல் ஒரு பன்னி மூக்கை விட்டு போகிறது எனவும் அந்த பன்னியை முதலேயே அடித்து கொன்றிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக ஜி.பி. முத்துவின் கதாப்பாத்திரத்தைத்தான் இப்படி கூறுகிறார் என சமூகவலைதளத்தில் பேச்சுகள் அடிபட்டது.
இதனையடுத்து இதற்கு பதிலடி தரும் வகையில் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோவில் பன்றி அமைதியாகச் செல்லும், அதனை சீண்டினால் பன்றி கடித்துக் குதறிவிடும். பன்றி கடித்தால் எதுவும் மிச்சம் இருக்காது என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.
இதற்கு ஜி.பி. முத்துவின் ரசிகர்கள் பலர் கமெண்ட்களில் அவருக்கு ஆதரவான கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
English Summary
GP Muthu responded to the blue shirt maran who criticized him as a pig