அசத்தும் இந்திய அணி! ஒத்த விக்கெட்டுடன் நாளை சம்பவம் இருக்கு!
IND vs NZ 3rd test day 2
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 235 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 263 ரன்களை அடித்தது, இதில், ஷுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் பந்த் 60 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்தியா 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 171 ரன்கள் சேர்த்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் 1 ரன்னில் அவுட் ஆனார். வில் யங் 51 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.