திருமவளவனனின் கேடுகெட்ட அரசியல் இது! வாய் சவடால் வெத்து வேட்டு! வன்ம அரசியல் நாடகம்... உச்சகட்ட கொந்தளிப்பில் பாஜக பதிலடி! - Seithipunal
Seithipunal


விசிக தலைவர் திருமாவளவன் நேற்று விடுத்த அறிக்கையில், "தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்ற நாளான நவம்பர் 1-ஐ ‘தமிழர் இறையாண்மை நாளாக’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருமாவளவனின் இந்த அறிக்கைக்கு, பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எதிர்மறையாக பேசி மற்றவர்களின் கவனத்தை தன் மேல் திருப்ப முயற்சிக்கும் மலிவான, கேடுகெட்ட அரசியல். 

இந்தியா தன்னுடைய நிர்வாக வசதிக்காக மாநிலங்களை வரையறுத்துள்ளதோடு, அதற்கென பல கடமைகளை பணித்துள்ளது என்பது தெரிந்தும் பிரிவினை பேசி மக்களை தூண்டி விடத்துடிக்கும் வன்ம அரசியல் நாடகத்தை நடத்தும் இந்த நபரை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். 

திமுக வின் தயவில்லாமல் அரசியல் செய்ய முடியாத இவரின் வாய் சவடால் வெத்து வேட்டு.  தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது இந்திய இறையாண்மை என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக்குகிறது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy condemn to VCK Thirumavalavan DMK Tamilnadu day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->