தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறல்.‌. "தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?".. விளாசிய ஜி‌.வி பிரகாஷ்.!! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைய்ந்தவி ஆகியோரின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது‌. இருவரும் திருமணம் வாழ்வில் இருந்து பிரிய போவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். இதனை விட்டு வைக்காத சிலர் தங்கள் கற்பனைக்கு ஏற்றார் போல் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட தொடங்கிவிட்டனர். 

இதனால் மனம் நொந்து போன இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "புரிதலும் போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது பிரிவது குறித்து புது வெளியில் விவாதிப்பது துரதிஷ்டவசமானது. 

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறின் ஒளியும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...? 

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும் காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருக்கும் பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி" என இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV Prakash request do not criticized divorce matter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->