விவாகரத்தில் முடிந்தது "ஜி.வி பிரகாஷ்-சைந்தவி மணவாழ்வு" .. ரசிகர்களுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவி பிரகாசுக்கும் பாடகி சைய்ந்தவிக்கு ஏற்பட்ட காதல் திருமணத்தின் முடிவடைந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக 11 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜி.வி பிரகாஷ். 

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் "ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு நானும் சைந்தவியும் எங்களின் 11 ஆண்டு கால திருமண வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறோம். இருவருக்குமான மன அமைதி வளர்ச்சி கருத்தில் கொண்டு பரஸ்பர மரியாதையை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். 

ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் எங்களின் இந்த தனிப்பட்ட முடிவை மதித்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இருவரும் பிரிவதை தெரிவிப்பதோடு இந்த முடிவே சிறந்தது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களின் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு அவசியமானது" என பதிவிட்டுள்ளார். இதே பதிவை சைந்தவியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GV Prakash Saindhavi announce divorce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->