மருமகனிடம் கூட நிமிடத்திற்கு ரேட் பேசிய பலே மாமியார்.! ஹன்சிகா அம்மாவின் பேட்டியால்  அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ஹன்சிகா இவர் தனது நெருங்கிய நண்பரான சோஹேல்  கதுரியா என்பவரை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவர்கள் தேனிலவு சென்று வந்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாயின. இவர்களின் திருமணவிழாவை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் லவ் ஷாதி ட்ராமா என்று ஒளிபரப்பப்படுகிறது. அந்த ப்ரோக்ராமில் அவரது தாயார் மருமகன் குடும்பத்தாரிடம் போனில் பேசியது போல் ஒரு சீன் இருந்தது. அந்த சீன் தான் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் ஹன்சிகாவின் தாயார்  தனது மருமகன் குடும்பத்தார் எல்லா குடும்ப நிகழ்ச்சிக்கும் தாமதமாக வருவதாக தெரிவித்துள்ளார். இதனை தவிர்ப்பதற்காக தனது மருமகனின் குடும்பத்தாருடன் ஒரு டீல் பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த டீலின்படி மருமகனின் குடும்பத்தார்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஐந்து லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என தான் டீலிங் பேசியிருப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார் ஹன்சிகாவின் தாயார். "என்னடா, இது மாமியார்கள் மருமகளை தான் கொடுமை செய்வார்கள். ஆனால் இங்கு நிலமை வேறு மாதிரி இருக்கிறதே! என  நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hanshika mother makes a funnydeal with her son in law to avoid being late in family functions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->