காதல் கணவருடன் ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்.! கல்யாண களை அள்ளுது.!  - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு  ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவருடைய நடிப்பில் 105 மினிட்ஸ், பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான மஹா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தமிழிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சோஹேல் கதுரியாவை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. 

இவர்களது, திருமண வீடியோ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகை ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் நல்ல கமெண்டுகளை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hansika and her future husband video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->