31 குழந்தைகளுக்கு தாயான தனுஷ் பட நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு  ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவருடைய நடிப்பில் 105 மினிட்ஸ், பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான மஹா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தமிழிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிகை ஹன்சிகா சோஹேல் கதுரியாவை காதலிப்பதாக அறிவித்து சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார். நடிகை ஹன்சிகா ஆதரவற்றவர்களுக்கு அடிக்கடி உதவி செய்யும் பதிவுகளை வெளியிட்டு வருவார். 

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவரது குழந்தைகள் 31 ஆக இருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். அவர் தத்தெடுத்து வளத்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ள மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தி, "இந்த குழந்தைகளுக்கு புத்தாண்டில் புதிய உடை வாங்கிக் கொடுத்தேன். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நானும் மகிழ்ந்தேன் ஒரு தாயாக." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hansika Motwani adopt 31 babies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->