நுரையீரலில் பாதிப்பு, ஹரிஷ் கல்யாணை அதிரவைத்த பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் சிந்து சமவெளி மூலம் அறிமுகமாகி வில்அம்பு, பொறியாளன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு, மக்களிடையே பிரபலமானார். இதைதொடர்ந்து இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான ரைசாவுடன் ஜோடி சேர்ந்து "பியார் பிரேமம் காதல்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் தற்போது இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஷில்பா மஞ்சுநாத் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும்  இப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் லடாக்கில் நடைபெற்றது.  இது குறித்து ஹரிஷ் கல்யாண் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் லடாக்கில் நடந்த அதிர்ச்சியான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

          

இதில் அழகான சொர்க்கம் போல் இருக்கும் சில இடங்களும் ஆபத்தானவையே. அவ்வாறு ஒருமுறை, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே சில காட்சிகளை படம்பிடித்த போது திடீரென்று, உதவி இயக்குனர் ஒருவரால் மூச்சுவிட முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். 

அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வரும்வரை நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். மேலும் வழக்கமாக, உயரமான பகுதிகளில் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். அவர் சரியான கம்பளி  ஆடைகளை அணியவில்லை, மேலும் அவரது காதுகளையும் மூடவில்லை, அதனால் அவரது நுரையீரல் பாதிப்படைந்துள்ளது என  மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

harish kalyan shocked by director lungs problem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->