அமித் ஷாவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் - பெரியாரிய அமைப்புகள்!
Coimbatore Amit Shah ambedkar periyar Black Flag Protest
இரண்டு நாள் பயணமாக வரும் 25 ஆம் தேதி தமிழக வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தொடர்ந்து 26ஆம் தேதியும் அரசியல் மற்றும் அரசு சம்மந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித் ஷாவை வரவேற்க பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அமித்ஷாவின் வருகையை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கருப்புக் கொடி காட்ட முடிவெடுத்துள்ளன.
காந்திபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது, அம்பேத்கரை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
English Summary
Coimbatore Amit Shah ambedkar periyar Black Flag Protest