மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ரஜினியின் பாட்ஷா.!
baasha movie again re release
கடந்த 1995ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார்.
அதாவது "படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
English Summary
baasha movie again re release