முன்னாள் நடிகர் DyCM உதயநிதி ஏமாற்றுகிறாரா..?! தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் புதிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


துணை முதல்வரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்கள் பல வெற்றியைக் கொடுத்தன, அதுமட்டுமின்றி மக்களை வெகுவாக ஈர்த்தது.

ஏஞ்சல் படம்:

அரசியலுக்குள் வந்த பிறகு தான் படம் எதுவும் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது தற்போது திரையுலகத்தில் இருந்து வழக்கு ஒன்று தொடுத்துள்ளனர். "ஏஞ்சல் "என்ற படத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்காததால், இதற்கு முன்பே 25 கோடி இழப்பீடு வழங்க கோரி,பட தயாரிப்பாளர்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கல் செய்த தயாரிப்பாளர்:

ஏஞ்சல் பட ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர்த் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி,பாயில் ராஜ்புட் மற்றும் யோகி பாபு நடிக்க, இயக்குனர்க் கே. எஸ் அதியமான் இயக்கத்தில் இப்படத்தை எடுக்க முடிவு செய்து,2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும் 80% படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் 20 % படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், இப்படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்தப் படமே தனது கடைசி படம் எனக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்:

மேலும் இப்பொழுது இப்படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டு உள்ள நிலையில் ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால்,ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படிப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும் 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்த் தயாரிப்பாளர் ராம சரவணன்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளாத ராமசரவணன் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Udhayanidhi cheating The director is upset because he was not given a call sheet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->