கெத்து காட்டுரார் சார் நம்ம ஆளு!!! கொங்கரா வெளியிட்ட SK வீடியோ....
Our man is a bad guy SK video released by Kongara
தமிழ்ச் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர்ச் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த 'அமரன் 'திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.340 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
பெஸ்ட் வசூல் படம்:
இது சிவகார்த்திகேயனின் கெரியரில் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறி உள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் எழுந்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25-ஆவது படமான "பராசக்தி" படத்தில் நடித்து வருகிறார்.
![](https://img.seithipunal.com/media/sk1-jpbpv.jpg)
கொங்கராவின் பராசக்தி:
இதைத் தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் அவரது 40 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், இயக்குனர்ச் சுதா கொங்கரா இவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவானது ரசிகர்கள் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
வெளியிட்ட வீடியோ:
மேலும் இந்த வீடியோவில் சுதா கோங்கரா சிவகார்த்திகேயனை வைத்து எடுத்த சில காட்சிகள் மற்றும் இருவரும் (சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன்) கலந்துரையாடுவது போன்ற காட்சிகள் மற்றும் திரைப்படம் எடுத்த இடத்தின் காட்சிகள் போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனின் புதுவிதமான தோற்றத்தைக் கண்டு வியப்பில் உள்ளனர். இப்படத்தில் இவர் மொழி ஈகியர்களில் ஒருவரான 'ராஜேந்திரன்' கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் ஆர்வம்:
இதைக் கண்ட பிறகு ரசிகர்களுக்குச் சிவகார்த்திகேயன் மீதுள்ள பார்வையானது வேறு கோணத்தில் மாறியுள்ளது. தனது நடிப்பின் அடுத்த கட்டத்தைக் காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
English Summary
Our man is a bad guy SK video released by Kongara