ஹாரி பாட்டர் பட பிரபல நடிகை காலமானார்! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட்டில் ஹாரி பாட்டர், டோவ்ன்டன் அபே உள்ளிட்ட திரைப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேகி ஸ்மித், குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது.

கடந்த 1969-ம் ஆண்டு வெளியான 'தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி' என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை இவர் வென்றார்.

இந்த நிலையில், தற்போது 89-வயதான இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களும் இவரின் மறைவுக்கு ஹாரி பாட்டர் படங்களில் அவர் பேசிய வசனங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harry Potter famous actress passed away


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->