ரூ.9000 கோடியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்!...முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல்! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவிற்குட்பட்ட  அகவலம், துறையூர், பெருவளையம் ,நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ரூ.9000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைய உள்ளது.

புதியதாக அமைய உள்ள இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவன கட்டுமான பணிகளுக்காக, டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tata Motors Company at Rs.9000 Crores The foundation stone of chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->