SPB சாலை - முதலமைச்சருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி.!  - Seithipunal
Seithipunal


பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்த இவரது நான்காவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் விதமாக, அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் அவரது இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ilaiyaraja thanks to cm mk stalin for announce sp balasubramaniyan road


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->