2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்கள் - மத்திய அமைச்சர் தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லி வித்யா பவனில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் தற்போது 157 விமான நிலையங்கள் உள்ளதாகவும், அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் 2047ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று தெரிவித்த அவர், அப்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் எண்ணிக்கை 350 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 2014ம் ஆண்டு மொத்தம் 74 விமான நிலையங்கள் இருந்ததாகவும், அப்போது வெளிநாடுகளை சேர்ந்த 4.60 கோடி பேர் இந்தியாவுக்கு வந்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது நாட்டில் 157 விமான நிலையங்கள் உள்ள நிலையில் 7 கோடி வெளிநாட்டினர் { 35 சதவீதத்தினர் சுற்றுலா, விடுமுறைகளை கொண்டாட} இந்தியாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

350 Airports in India by 2047 Union Minister Information


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->