வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? - மரண அப்டேட் கொடுத்த படக்குழு.! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதுமட்டுமல்லாமல், முன்னணி திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 'வாழை' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் 11-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaazhai movie ott release date announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->