பனியன் துணிகள் கொள்முதல் செய்து ரூ.1.45 கோடி மோசடி... ஐதராபாத் தம்பதிக்கு சிறை!  - Seithipunal
Seithipunal


ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு  பனியன் துணிகள் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றி வந்த ஐதராபாத் தம்பதியை போலீசார் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மகேஷ் ராமசாமி என்பவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் பனியன் துணிகள் கொள்முதல் செய்து வந்துள்ளனர்.இந்தநிலையில்  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். 

இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். 

 போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த  ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 1.45 crore scam in purchase of baniyan clothes Hyderabad couple jailed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->