சேலத்தில் கஞ்சா விற்பனை - கையும் களவுமாக பிடிபட்ட 3 பேர் கைது.!
three peoples arrested for drugs sales in salem
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை போலீசாருக்கு போதைப்பொருள் விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் சுண்ணாம்புகார தெருவில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு கோவில் அருகே சந்தேகம் படும் படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன், திவாகர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று வீராணம் போலீசார் தைலனூர் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples arrested for drugs sales in salem