வாக்குகளை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என  பா.ஜ.க. பெண்  எம்.எல்.ஏ.பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதி பா.ஜ.க. பெண்  எம்.எல்.ஏ.உஷா தாகூர். இவர் முன்னாள் மந்திரி ஆவர், இவர் தனது தொகுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அப்படி என்னதான் பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்..பா.ஜ.க. பெண்  எம்.எல்.ஏ.உஷா தாகூர் பேசியதாவது : மக்களுக்கு பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால்  ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும்  வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்பது மனித குலத்துக்கு அவமானம் .

பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is how people who sell votes are born BJP MLA Controversy talk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->