தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிகப்பெரிய ரசிகை நான்..பிரபல பாடகி சுவாரஸ்ய பேட்டி!
I am a huge fan of Devi Sri Prasad. Interesting interview with the famous singer
"நான் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் ஏ.ஆர். ரகுமானுக்குப் பிறகு அவரைதான் மிகப் பெரியவராக கருதுகிறேன் என பிரபல பாடகி சலோனி தக்கர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. இந்தப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் இயக்கி பிரபலமான சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் 'தண்டேல்' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. இதில் மிகவும் விரும்பப்பட்ட பாடல் 'நமோ நமச்சிவாய'. இதனை இந்தியில் பாடியவர் சலோனி தக்கர். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து பாடகி சலோனி தக்கர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் ஏ.ஆர். ரகுமானுக்குப் பிறகு அவரைதான் மிகப் பெரியவராக கருதுகிறேன் என கூறினார் .மேலும் அவரது உதவியாளரிடமிருந்து, தண்டேல் படத்தில் "நமோ நமச்சிவாய" பாடலைப் பாடுவதற்கு எனக்கு அழைப்பு வந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்' என தேவி ஸ்ரீ பிரசாத் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
English Summary
I am a huge fan of Devi Sri Prasad. Interesting interview with the famous singer