வயநாட்டில் உலாவரும் புலி - 2 நாட்கள் ஊரடங்கு அமல்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு அருகே மானந்தவாடி பஞ்சராகொல்லி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற பெண் ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேட்டும், சம்பந்தப்பட்ட புலியை சுட்டு கொல்ல வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார்.

அதன் படி வனத்துறையினர் உள்பட 7 குழுவினர் சம்பந்தப்பட்ட புலியை பிடிக்க இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் வனத்தில் தேடுதல் பணியில் ஈடுப்பட்டிருந்த RRT குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் மீது புலி பாய்ந்தது. இதனால் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக புலியை கண்டால் சுட்டுக் கொல்லவும், மானந்தவாடி நகராட்சிக்கு உட்பட்ட பஞ்சரா கொல்லி, மேல சிலக்கரை , பிலாகாவு, முன்று ரோடு, மணியன் குண்ணு போன்ற பகுதிகளுக்கு இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரம் அதாவது இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி பள்ளிகள், அங்கன்வாடிகள், மத தலங்கள் மற்றும் டியூஷன் மையங்கள் மூடப்படும். மக்கள் இரண்டு நாட்கள் வெளியே வரவேண்டாம். கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two days lock down in kerala wayanad for tiger


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->