முதலமைச்சரின் நாடகம் மக்களிடம் எடுபடாது - செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்கள் சந்தீத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-"டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி போராடினார். அவர் தான் டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என்று பத்து மாதமாக முதலமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? எம்.பி.க்கள் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? என்றுக் கேட்டார்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டு மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டான் பதிலளிக்கவில்லை. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடியதை தொடர்ந்து தான் முதலமைச்சர் அதனை எதிர்க்கிறோம் என்றார். 

வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது. திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது.

திமுகவிற்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்கிறது. வேங்கை வயல் விவகாரத்தில் திமுகவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. 

பெரியாரை இழிவாக பேசிய சீமானை திமுக அரசு கைது செய்து இருக்க வேண்டும். திராவிடர் கழகம், முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister sellur raju speech about cm mk stalin in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->