ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
High Court orders action against hotels in Ooty and Kodaikanal
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில், உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். அத்துடன், தங்கும் விடுதிகள் சுற்றுலாப்பயணிகளிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கன்றனவா என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், சட்ட விரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
High Court orders action against hotels in Ooty and Kodaikanal