சொத்துவரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் அதிகாரி - போலீசார் வலையில் சிக்கிய அவலம்.!!
revenue department officer arrested for bribe in thenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி வட்டம் தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு புளியங்குடி 28வது வார்டில் 3 சென்ட் காலி மனையை வாங்கி, அதில் 800 சதுர அடியில் வீடு கட்டியுள்ளார். இந்த புதிய வீட்டிற்கு சொத்துவரி நிர்ணயம் செய்ய புளியங்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து, நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், அந்த வீட்டை பார்வையிட்டு அளவீடு செய்த பின்னர், அலுவலகத்துக்கு வரும்படி காளிராஜிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற காளிராஜிடம், ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால்தான் சொத்துவரி நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், சம்பவம் குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, காளிராஜன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் உதவியாளர் அகமது உமரை தனது வீட்டுக்கு வரவழைத்து கொடுத்துள்ளார்.
அதன் படி அகமது உமர் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதை அறிந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் விரைந்து சென்று, அகமது உமரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
revenue department officer arrested for bribe in thenkasi