பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை; பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு..!
The entire country is united against terrorism Central Government
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கர தாக்குதல் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலையடுத்து அங்கு 400- மேற்பட்ட குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அனந்த்நாக், பந்திபுரா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, சிஆர்பிஎப், ஐம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளது.
English Summary
The entire country is united against terrorism Central Government