மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் பெயரில் சாலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படும் என்று, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்தவர் . 

பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவர்.

கலைஞர் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர்.

அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Balasubrahmanyam chennai SPBRoad


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->