புனித நீராடும்போது 43 பேர் பலி - பீகாரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் புனித நீராடும் பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காணாமல் போன சம்பவர் பெறும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் நடைபெறும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் பதினைந்து மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் பக்தர்கள் ஜீவித்புத்ரிகா என்ற புனித நீராடும் பண்டிகை நடைபெற்றது. இந்த பண்டிகையின் போது புனித நீராடிய 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

43 peoples died in bihar for jivitputrika


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->