திரைப்படமாக உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு: நாயகன் யார் தெரியுமா?
Ilayaraja biography film
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி, பண்ணையபுரத்தில் பிறந்த இளையராஜா தமிழ் சினிமாவில் கடந்த 1970 ஆம் ஆண்டு நுழைந்து தனக்கென ஒரு தனி படையை உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பால்கி இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது அவரது 50 வது படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வருகின்ற 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.